சினிமா செய்திகள்

தெலுங்கு நடிகர் சங்க ராஜினாமாவை பிரகாஷ்ராஜ் வாபஸ் பெற சமரச முயற்சி + "||" + Prakashraj seeks compromise to withdraw Telugu Actors Association resignation

தெலுங்கு நடிகர் சங்க ராஜினாமாவை பிரகாஷ்ராஜ் வாபஸ் பெற சமரச முயற்சி

தெலுங்கு நடிகர் சங்க ராஜினாமாவை பிரகாஷ்ராஜ் வாபஸ் பெற சமரச முயற்சி
தெலுங்கு நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் தோல்வி அடைந்தார்.
தெலுங்கு நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் தோல்வி அடைந்தார். மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தலைவராக தேர்வானார். வெளிமாநிலத்தை சேர்ந்தவர், தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர் கிடையாது. அவரை ஆதரிக்கக் கூடாது என்றெல்லாம் பிரசாரம் செய்து தன்னை தோற்கடித்து விட்டதாக பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டி தெலுங்கு நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஷ்ணு மஞ்சுவுக்கு ராஜினாமா குறித்த குறுஞ்செய்தியை அவர் அனுப்பி உள்ளார். அதில் வெற்றி பெற்ற உங்களுக்கு வாழ்த்துகள். எனது ராஜிமானாவை ஏற்றுக்கொள்ளுங்கள். உறுப்பினராக இல்லாமல் உங்களுக்கு ஆதரவு கொடுப்பேன் என்று கூறியுள்ளார். இதற்கு விஷ்ணு மஞ்சு அனுப்பி உள்ள பதிலில், ‘‘நீங்கள் ராஜினாமா செய்வதை நான் விரும்பவில்லை. என்னைவிட நீங்கள் மூத்தவர். வெற்றி, தோல்வியை ஒன்றாக பாவிக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியும். உணர்ச்சி வசப்பட்டு ராஜினாமா முடிவை எடுக்க வேண்டாம். நீங்களும் எங்கள் குடும்பத்தில் ஒருவர். நாம் இணைந்து பணியாற்றுவோம். உங்களை விரைவில் நேரில் சந்திக்கிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார். இதையடுத்து ராஜினாமாவை பிரகாஷ்ராஜ் வாபஸ் பெறுவாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சொத்து தகராறில் மோதல்: வீடு புகுந்து 3 பேரை கொல்ல முயற்சி
சொத்து தகராறில் மோதல்: வீடு புகுந்து 3 பேரை கொல்ல முயற்சி கத்தியால் குத்திய வாலிபர் கைது.
2. குடும்பத்தகராறு மனைவி கழுத்தை அறுத்துக்கொலை கணவரும் தற்கொலை முயற்சி
குடும்பத்தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்துக்கொன்ற கணவர் தானும் தற்கொலைக்கு முயன்றார்.
3. மனைவியின் கழுத்தை அறுத்துக்கொலை கணவரும் தற்கொலை முயற்சி
குடும்பத்தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்துக்கொன்ற கணவர், தானும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றார்.
4. ஆவடி அருகே ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
ஆவடி அருகே ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி தப்பியோடிய மர்ம நபருக்கு போலீஸ் வலைவிச்சு.
5. பட்டா வழங்காததால் 8 குடும்பத்தினர் தற்கொலை முயற்சி
பட்டா வழங்காததால் 8 குடும்பத்தினர் தற்கொலை முயற்சி கலெக்டர் விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு.