நடிகை ஸ்ரேயாவுக்கு பெண் குழந்தை


நடிகை ஸ்ரேயாவுக்கு பெண் குழந்தை
x
தினத்தந்தி 12 Oct 2021 8:08 PM GMT (Updated: 2021-10-13T01:38:45+05:30)

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரேயா.

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரேயா. சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார். மழை, அழகிய தமிழ் மகன், தோரணை, குட்டி, உத்தம புத்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். கடந்த 2018-ல் ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரூ கோச்சே என்பவரை ஸ்ரேயா காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டு கணவருடன் பார்சிலோனாவில் குடியேறினார். அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து சென்றார். கடந்த வருடம் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்து உள்ளார். குழந்தையுடன் இருக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். எங்களுக்கு அழகான தேவதையை கொடுத்த கடவுளுக்கு நன்றி என்றும் பதிவிட்டுள்ளார். ஸ்ரேயாவுக்கு வலைத்தளத்தில் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். குழந்தை பிறந்து பல நாட்கள் ஆகிவிட்டது என்றும், அதை ரகசியமாக வைத்து இப்போதுதான் வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Next Story