சினிமா செய்திகள்

இன்று மாலை வெளியாகிறது 'அண்ணாத்த' டீசர் + "||" + 'Annatha' teaser is released this evening

இன்று மாலை வெளியாகிறது 'அண்ணாத்த' டீசர்

இன்று மாலை வெளியாகிறது 'அண்ணாத்த' டீசர்
விஸ்வாசம் படத்திற்கு பின் டைரக்டர் சிறுத்தை சிவா தற்போது ஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கியுள்ளார்.
சென்னை

விஸ்வாசம் படத்திற்கு பின் டைரக்டர் சிறுத்தை சிவா தற்போது ஜினி நடிக்கும்  அண்ணாத்த படத்தை இயக்கியுள்ளார். 
ரஜினியுடன் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார்.

சில நாட்களுக்கு முன் 'அண்ணாத்த' முதல் பார்வை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.  படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடலும் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகி பெரிதும் ரசிக்கப்பட்டது.

இந்த நிலையில் 'அண்ணாத்த' படத்தின் டீசரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள 'அண்ணாத்த' படம் தீபாவளிக்கு, நவம்பர் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தன்னை வீட்டை விட்டு வெளியே தள்ளியதாக பிரபல நடிகை பரபரப்பு புகார்
தன்னை வீட்டை விட்டு வெளியே தள்ளி, மோசமாக பேசினார் என்று இன்டீரியர் டிசைனர் மீது நடிகை மீரா சோப்ரா போலீசில் புகார் அளித்துள்ளார்.
2. பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்
பிரபல நடிகர் நெடுமுடி வேணு தனது 73 வயதில் காலமானார்
3. 'சாரல் சாரல் காற்றே ' அண்ணாத்த படத்தின் 2வது பாடல் வெளியானது
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள 'அண்ணாத்த' திரைப்படத்தின் 2வது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.
4. கருக்கலைப்பு வதந்திகள் எதுவும் என்னை பாதிக்காது - நடிகை சமந்தா
விவாகரத்தை தொடர்ந்து தன்னை சுற்றும் வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் சமந்தா தனது சமூக வலைதளத்தில் பதில் அளித்து உள்ளார்.
5. ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ‘முதல் சிங்கிள்’ அக்டோபர்-4 வெளியாகிறது
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ‘முதல் சிங்கிள்’ அக்டோபர்-4ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது.