சினிமா செய்திகள்

வீட்டை விட்டு நடிகையை வெளியே தள்ளியதாக புகார் + "||" + Complained of pushing the actress out of the house

வீட்டை விட்டு நடிகையை வெளியே தள்ளியதாக புகார்

வீட்டை விட்டு நடிகையை வெளியே தள்ளியதாக புகார்
தமிழில் அன்பே ஆருயிரே, லீ, மருதமலை, ஜாம்பவான், காளை உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிலா.
தமிழில் அன்பே ஆருயிரே, லீ, மருதமலை, ஜாம்பவான், காளை உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிலா. இவர் இந்தி, தெலுங்கு படங்களில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடித்து வருகிறார். நிலா மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் புதிய வீடு வாங்கி இருக்கிறார். இந்த வீட்டில் உள் அலங்கார வேலைகளை செய்ய இண்டீரியர் டிசைனர் ராஜிந்தர் என்பவரிடம் ரூ.17 லட்சத்துக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். முதல் தவணையாக ரூ.8 லட்சம் கொடுத்து விட்டு பனாரஸில் நடந்த சினிமா படப்பிடிப்புக்கு சென்று விட்டார். 15 நாட்களுக்கு பிறகு திரும்பி வந்து புதிய வீட்டை பார்த்து தரம் குறைந்த மலிவான பொருட்களை வைத்து உள் அலங்கார வேலைகள் செய்து இருப்பதாக குற்றம் சாட்டினார். இதனால் நிலாவுக்கும், உள் அலங்கார நிபுணருக்கும் வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டது. இதுகுறித்து நிலா கூறும்போது, ‘‘தரம் குறைந்த பொருளில் உள் அலங்காரம் செய்து இருப்பதை பற்றி நான் கேட்டபோது, என்னை எனது வீட்டில் இருந்தே வெளியே தள்ளி விட்டு இப்படி கேள்வி கேட்டால் வேலை செய்ய மாட்டேன் என்று மிரட்டினார். மேலும் மோசமான வார்த்தைகளால் என்னை திட்டினார்” என்றார். இதுகுறித்து மும்பை போலீசில் ராஜிந்தர் மீது நிலா புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆபாச படம் வெளியிட்டதாக தி.மு.க. பிரமுகர் மீது நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு புகார்
இணைய தளங்களில் தன்னை பற்றிய ஆபாசபடங்களை வெளியிட்டுள்ளதாக தி.மு.க. பிரமுகர் மீது நடிகை காயத்ரி ரகுராம் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.
2. வலைத்தளத்தில் அவதூறு பிரபல நடிகை போலீசில் புகார்
பிரபல இந்தி நடிகை சுவரா பாஸ்கர். இவர் தனுசுடன் ராஞ்சனா படத்தில் நடித்து பிரபலமானார்.
3. வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் தங்க மூக்குத்தி கொடுத்ததாக அ.தி.மு.க.வினர் புகார்
குன்றத்தூர் ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் தங்க மூக்குத்தி கொடுத்ததாக அ.தி.மு.க.வினர் புகார் தெரிவித்து உள்ளனர்.
4. அண்ணா பல்கலை கழகம் மீது ரூ.16 கோடி வரி ஏய்ப்பு புகார்
சென்னை அண்ணா பல்கலை கழகம் மீது ரூ.16 கோடி வரி ஏய்ப்பு புகார் எழுந்துள்ளது.
5. நலவாரியத்தில் சேர்ந்தால் ரூ.5 ஆயிரம் தருவதாக விண்ணப்பம் வினியோகம் - தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. புகார்
நலவாரியத்தில் சேர்ந்தால் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் எனக்கூறி உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க.வினர் விண்ணப்பம் வழங்கி வருவதாக தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. புகார் அளித்துள்ளது.