சினிமா செய்திகள்

தெலுங்கு நடிகர் சங்க மோதல் பிரகாஷ்ராஜ் அணியினர் 11 பேர் ராஜினாமா + "||" + 11 members of Telugu Actors' Association clash Prakashraj team resigns

தெலுங்கு நடிகர் சங்க மோதல் பிரகாஷ்ராஜ் அணியினர் 11 பேர் ராஜினாமா

தெலுங்கு நடிகர் சங்க மோதல் பிரகாஷ்ராஜ் அணியினர் 11 பேர் ராஜினாமா
தெலுங்கு நடிகர் சங்க மோதல் பிரகாஷ்ராஜ் அணியினர் 11 பேர் ராஜினாமா.
தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்த பிரகாஷ்ராஜ் தன்னை வெளிநபர் என்றும், தெலுங்கு கலைஞர்களுக்கு மட்டும் ஓட்டு போடுங்கள் என்றும் பிரசாரம் செய்து தோற்கடித்து விட்டனர் என்று குற்றம் சாட்டி தெலுங்கு நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பாகுபாடு காட்டும் சக கலைஞர்களுடன் என்னால் இருக்க முடியாது. தெலுங்கு நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தாலும் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிப்பேன் என்று அவர் கூறினார். தேர்தலில் பிரகாஷ்ராஜை ஆதரித்த நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவும் சங்கத்தில் இருந்து விலகினார். மேலும் இன்னொரு அதிர்ச்சியாக தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சில பொறுப்புகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரகாஷ்ராஜ் அணியை சேர்ந்த 11 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணியினர் எடுக்கும் முடிவுக்கு இடையூறாக இருக்க கூடாது என்பதற்காக தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அவர்கள் அறிவித்து உள்ளனர். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கவுரவ டாக்டர் பட்டம் பெறும் நடிகர் சிலம்பரசன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழக்க இருக்கிறது.
2. கொரோனா பாதிப்பு... வீட்டு தனிமையில் நடிகர் மகேஷ் பாபு
தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மகேஷ் பாபு கேட்டுக்கொண்டுள்ளார்.
3. கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பினார் நடிகர் வடிவேலு
கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் வடிவேலு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.
4. பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பங்கேற்ற நிகழ்ச்சியில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் மோதல்
பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பங்கேற்ற நிகழ்ச்சியில் அ.தி.மு.க. - தி.மு.க.வினர் மோதிக் கொண்டனர்.
5. உள்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மோதல்; 4 பேர் காயம்
உள்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மோதிக்கொண்டனர். இதில் 4 பேர் காயம் அடைந் தனர். கார் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை