சினிமா செய்திகள்

அடுத்த வருடம் திருமணம் சினிமாவை விட்டு விலக ரகுல்பிரீத் சிங் முடிவு? + "||" + Ragulpreet Singh decides to leave cinema next year?

அடுத்த வருடம் திருமணம் சினிமாவை விட்டு விலக ரகுல்பிரீத் சிங் முடிவு?

அடுத்த வருடம் திருமணம் சினிமாவை விட்டு விலக ரகுல்பிரீத் சிங் முடிவு?
தமிழில் கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமானவர் ரகுல்பிரீத் சிங்.
தமிழில் கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமானவர் ரகுல்பிரீத் சிங். என்.ஜி.கே, என்னமோ ஏதோ, தேவ் உள்ளிட்ட மேலும் பல படங்களிலும் நடித்துள்ளார். கமல்ஹாசனுடன் இந்தியன் 2 மற்றும் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்பு இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியை காதலிப்பதாக ரகுல்பிரீத் சிங் அறிவித்தார். காதலருடன் கைகோர்த்து செல்லும் புகைப்படத்தையும் பகிர்ந்து, “அன்பானவரே நன்றி. இந்த ஆண்டில் எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பரிசு நீங்கள். எனது வாழ்க்கையை வண்ணமயமாக்கிய உங்களுக்கு நன்றி. இடைவிடாமல் என்னை சிரிக்க வைப்பதற்கு நன்றி. நீ நீயாக இருப்பதற்கு நன்றி. ஒன்றாக சேர்ந்து அதிக நினைவுகளை உருவாக்குவோம்'' என்ற பதிவையும் வெளியிட்டார். ஜாக்கி பாக்னானி தமிழில் திரிஷாவுடன் மோகினி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும், அதற்கு முன்பாக கைவசம் உள்ள படங்களை நடித்து முடித்து விட்டு சினிமாவை விட்டு விலக ரகுல்பிரீத் சிங் முடிவு செய்து இருப்பதாகவும் தெலுங்கு பட உலகில் தகவல் பரவி வருகிறது.