சினிமா செய்திகள்

முதல் தடவையாக இந்தி படத்தில் நடிக்கும் சமந்தா + "||" + Samantha is making her Hindi film debut

முதல் தடவையாக இந்தி படத்தில் நடிக்கும் சமந்தா

முதல் தடவையாக இந்தி படத்தில் நடிக்கும் சமந்தா
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்து உள்ளனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்து உள்ளனர். சமந்தா கவர்ச்சியாக நடிப்பது நாகசைதன்யா குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்றும், குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்தார் என்றும், ஆடை வடிவமைப்பாளருடன் சமந்தா நட்பாக பழகுவது நாகசைதன்யாவுக்கு பிடிக்கவில்லை என்றும், இதுவே விவாகரத்துக்கு காரணம் என்றும் தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவியது. இது தவறான வதந்தி என்று சமந்தா மறுத்தார். சமந்தா ஏற்கனவே தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் தமிழ், தெலுங்கில் தயாராகும் சாகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு முதல் தடவையாக இந்தி படத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். ஏற்கனவே பேமிலிமேன் 2 வெப் தொடரில் நடித்த பிறகு சமந்தாவுக்கு சில இந்தி பட வாய்ப்புகள் வந்தன. அதில் ஒரு கதையை தேர்வு செய்துள்ளார். சமந்தா நடிக்கும் புதிய இந்தி படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.தொடர்புடைய செய்திகள்

1. ரசிகர்கள் எதிர்பார்ப்பது என் படத்தில் இல்லை - பிரபு தேவா
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பணியாற்றி வரும் பிரபு தேவா, தற்போது தேள் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
2. பிரபல நடிகர் படத்தில் குத்தாட்டம் போடும் சமந்தா
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வரும் சமந்தா, தற்போது பிரபல நடிகர் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
3. ‘நான் ஒரு போராளி’ -நடிகை சமந்தா
கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த சமந்தா மீண்டும் படங்களில் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார்.
4. அஜித் பட நடிகை மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் சமந்தா?
தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை சமந்தா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.