சினிமா செய்திகள்

தீபாவளிக்கு வரும் 5 படங்கள் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கிடைக்குமா? + "||" + Will 5 films coming for Deepavali get 100 per cent seats?

தீபாவளிக்கு வரும் 5 படங்கள் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கிடைக்குமா?

தீபாவளிக்கு வரும் 5 படங்கள் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கிடைக்குமா?
கொரோனா பரவலால் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனா பரவலால் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனை 100 சதவீதமாக உயர்த்த திரைப்பட சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 1-ந் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை நிரப்ப அரசு அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகி ஸ்ரீதர் கூறினார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை விருந்தாக ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஷாலின் எனிமி, சிம்புவின் மாநாடு, அருண் விஜய்யின் வா டீல் ஆகிய 4 படங்கள் தியேட்டர்களிலும், சூர்யாவின் ஜெய்பீம் ஓ.டி.டி, தளத்திலும் வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அண்ணாத்த படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. இந்த படத்தில் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாக பாடிய ‘‘அண்ணாத்த அண்ணாத்த வரேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு, நடையில உடையில கொல கொல மாஸு” என்று தொடங்கும் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அடுத்து படத்தின் டிரெய்லர் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 கதாநாயகிகள் நடித்துள்ளனர். சிவா இயக்கி உள்ளார். எனிமி படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடித்துள்ளதால் படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. விமான நிலையங்களில் விரைவில் முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் பயணிகளுக்கு அனுமதி
இந்தியாவின் 4 விமான நிலையங்களில் முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.
2. டெல்லி மெட்ரோ ரெயிலில் 100% இருக்கைகளில் பயணிகள் அமர அனுமதி
டெல்லி மெட்ரோ ரெயிலில் 100% இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
3. 20 மாதங்களுக்கு பிறகு வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி அளித்த அமெரிக்கா...!
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு பயணிகளை அமெரிக்கா அனுமதிக்க தொடங்கியுள்ளது.
4. நடிகர் பாலகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதி
பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
5. தொழிலதிபரை கடத்தி சொத்துகளை எழுதி வாங்கிய வழக்கு: போலீஸ் அதிகாரிகளின் முன்ஜாமீன் மனுவை திரும்ப பெற அனுமதி
தொழிலதிபரை குடும்பத்துடன் கடத்திச்சென்று சொத்துகளை எழுதி வாங்கிய வழக்கில் போலீஸ் அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. இதையடுத்து முன்ஜாமீன் மனு போலீஸ் அதிகாரிகள் தரப்பில் திரும்ப பெறப்பட்டது.