சினிமா செய்திகள்

விக்ரம் வேதா ரீமேக் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது + "||" + Vikram Vedha remake Movie Shooting started today

விக்ரம் வேதா ரீமேக் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது

விக்ரம் வேதா ரீமேக் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது
நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான படம் விக்ரம் வேதா
சென்னை

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில்  நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் மாதவன்,   ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதி , மாதவன் இருவரின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே பாராட்டை  பெற்றது .

இப்படம் இந்தியில் ரீமேக்காக இருப்பதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியானது. 

மாதவன் கதாபாத்திரத்தில் நடிகர்  சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷன்  நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது .

அதன்படி  இப்படத்தின்  படப்பிடிப்பு இன்று தொடங்கி இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி  இந்த படத்தையும் இயக்குகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. ரீமேக் படம் மூலம் பாலிவுட்டுக்கு செல்லும் அனிருத்?
கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், விரைவில் பாலிவுட் படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. ரீமேக் படத்தில் கீர்த்தி சுரேஷ்
இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘மிமி’. இதில் கிரித்தி சனோன், பங்கஜ் திரிபாதி ஆகியோர் நடித்துள்ளனர்.