பிரபல நடிகை திடீர் மரணம்


பிரபல நடிகை திடீர் மரணம்
x
தினத்தந்தி 18 Oct 2021 12:23 AM GMT (Updated: 18 Oct 2021 12:23 AM GMT)

மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடரிலும், திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான உமா மகேஸ்வரி குடும்பத்துடன் சென்னை காட்டுப்பாக்கத்தில் வசித்து வந்தார்.

மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடரிலும், திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான உமா மகேஸ்வரி குடும்பத்துடன் சென்னை காட்டுப்பாக்கத்தில் வசித்து வந்தார். அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 40.

சேரன் இயக்கத்தில் முரளி, பார்த்திபன் ஆகியோர் நடித்த ‘வெற்றிக்கொடி கட்டு’ படத்தில் உமா மகேஸ்வரி நடித்து இருந்தார், அல்லி அர்ஜுனா, உன்னை நினைத்து உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் ஈ பார்கவி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடரில் விஜி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ஒரு கதையின் கதை, மஞ்சள் மகிமை, காலேஜ் ரோடு உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். உமா மகேஸ்வரியின் திடீர் மரணம் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர், நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Next Story