'தி பேட்மேன்' டிரைலர் சாதனை


தி பேட்மேன் டிரைலர் சாதனை
x
தினத்தந்தி 18 Oct 2021 9:50 AM GMT (Updated: 2021-10-18T15:20:18+05:30)

சூப்பர் ஹீரோ கதாபாத்திரமான பேட்மேன் படவரிசையில் மற்றுமொரு படம் அடுத்த ஆண்டு வெளியாகிறது.

கலிபோர்னியா,

சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரையும் கவரும். அந்த வகையான சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களில் ஒன்று பேட்மேன் கதாபாத்திரம்.

பேட்மேன் கதாபாத்திரத்தைக் மையமாகக் கொண்டு ஏற்கெனவே பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. வசூலையும் வாரி குவித்து உள்ளன. இதன் தொடர்ச்சியாக வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் மற்றொரு படம் 'தி பேட்மேன்'.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 4ந் தேதி படம் வெளியாகும் நிலையில் நேற்று படத்தின் டிரைலர் வெளியானது. டிரைலரில் பல சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் டிரைலர்  வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 1.5 கோடி பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

Next Story