சினிமா செய்திகள்

அண்ணாத்த படத்தின் 3வது பாடல் இன்று வெளியானது + "||" + The 3rd song of the movie Annatha was released today

அண்ணாத்த படத்தின் 3வது பாடல் இன்று வெளியானது

அண்ணாத்த படத்தின் 3வது பாடல் இன்று வெளியானது
நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் 3வது பாடல் இன்று வெளியானது.


சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், அண்ணன், தங்கை பாச பின்னணியை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'அண்ணாத்த'.   சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இயக்கம் டைரக்டர்  சிவா.  வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.

இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார். படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலர் நடிக்கின்றனர்.

முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்  விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரஜினிகாந்த் தோன்றும் பரபரப்பான சண்டை காட்சிகள் இடம்பெற்ற படத்தின் டீசரும் வெளியாகியுள்ளது.

படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக கவிஞர் விவேகா எழுதி, மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடியிருந்த 'அண்ணாத்த அண்ணாத்த' பாடல் மற்றும்  'சாரல் காற்றே' என்ற பாடல் என ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், மணி அமுதவன் எழுதியுள்ள 'மருதாணி' என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தது.  இதன்படி மருதாணி படப்பாடல் இன்று வெளிவந்துள்ளது.

இதனை, நகாஷ் ஆஷிஷ், அந்தோணி தாசன், வந்தனா ஸ்ரீனிவாசன் ஆகியோர் பாடியுள்ளனர்.  மானாமதுரையில, மாமன் குதிரையில மால கொண்டு வாரான் என்று பாடல் தொடங்குகிறது.  இதில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் மற்றும் மீனா ஆகியோர் தொடக்க காட்சிகளில் தோன்றுகின்றனர்.  இந்த பாடலுக்கான வீடியோ மொத்தம் 4.13 நிமிடங்களை கொண்டுள்ளது.