சுருட்டு பிடிக்கும் காட்சி சர்ச்சையில் நடிகர் தனுஷ்


சுருட்டு பிடிக்கும் காட்சி சர்ச்சையில் நடிகர் தனுஷ்
x
தினத்தந்தி 18 Oct 2021 4:40 PM GMT (Updated: 2021-10-18T22:10:30+05:30)

தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் ஓ.டி.டியில் வெளியானது.

தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் ஓ.டி.டியில் வெளியானது. இந்தியில் நடித்துள்ள அத்ராங்கிரே படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தி கிரேமேன் ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. நானே வருவேன் படத்தை செல்வராகவன் இயக்குகிறார்.

இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் வந்துள்ளன. தற்போது நானே வருவேன் படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் தனுஷ் சுருட்டு பிடித்தபடி இருக்கிறார். இதற்கு வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தனுசை கண்டித்து பலரும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

சிகரெட், சுருட்டு பிடிக்கும் காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் வற்புறுத்தி வரும் நிலையில் சுருட்டு பிடித்தபடி போஸ் கொடுப்பது நியாயமா? என்று விமர்சித்து உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்துக்கு திருச்சிற்றம்பலம் என்ற தலைப்பு வைத்ததற்கும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.


Next Story