சினிமா செய்திகள்

கணவரைபிரிந்ததால் மீண்டும் தீவிரமாக நடிக்கும் சமந்தா + "||" + Samantha who is acting seriously again after divorcing her husband

கணவரைபிரிந்ததால் மீண்டும் தீவிரமாக நடிக்கும் சமந்தா

கணவரைபிரிந்ததால் மீண்டும் தீவிரமாக நடிக்கும் சமந்தா
நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர்.
நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர். சமந்தா கவர்ச்சியாக நடிப்பது நாகசைதன்யா குடும்பத்துக்கு பிடிக்கவில்லை என்றும் இதனாலேயே மண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது. குடும்ப தகராறால் படங்களில் நடிப்பதை குறைத்த சமந்தா விவாகரத்து முடிவுக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தீவிரமாகி உள்ளார். ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார். சாகுந்தலம் படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படவேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளது. தற்போது மேலும் 3 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதில் ஒன்று இந்தி படம். முதல் தடவையாக இந்த படத்தின் மூலம் இந்திக்கு போகிறார். அவர் நடிக்க உள்ள மற்ற இரண்டு படங்களும் சமந்தாவை முன்னிலைப்படுத்தி கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களாக தயாராகின்றன. அதில் ஒரு படத்தை ஷாந்தா ரூபன் இயக்குகிறார். இன்னொரு படத்தை ஹரி, ஹரிஷ் ஆகியோர் இணைந்து இயக்குகிறார்கள். இந்த இரண்டு படங்களும் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராக உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. சமந்தாவை பிரியும் முடிவு ...! இருவரின் நலன் கருதியே...!- நாக சைதன்யா
சமந்தாவை பிரியும் முடிவு பரஸ்பர நலன் கருதியே எடுக்கப்பட்ட முடிவு என நடிகர் நாக சைதன்யா கூறினார்
2. என்னைக் காப்பாற்றியது அவர்கள்தான் - சமந்தா
சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற பாடல் மூலம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நடிகை சமந்தா, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசியிருக்கிறார்.
3. பதிலடி கொடுத்த சமந்தா... பதிவை நீக்கிய ரசிகர்
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் சமந்தா, ரசிகரின் பதிவுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
4. முன்னாள் கணவரின் மாமன் மகனுக்கு வாழ்த்து சொன்ன நடிகை சமந்தா
நடிகை சமந்தா, நடிகரும் தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் மாமன் மகனுமான ராணா டகுபதியின் பிறந்தநாளுக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
5. சமந்தா நடனமாடியுள்ள புஷ்பா படத்தின் பாடல்... இணையத்தில் வைரல்
இந்த ஒரு பாடலில் நடிப்பதற்கு மட்டும் சமந்தா சுமார் 1.5 கோடி சம்பளம் வாங்கியதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.