சினிமா செய்திகள்

சிறையில் அடைபட்டு தவிப்பு - பயங்கர குற்றவாளிகள் நடுவில் ஆர்யன்கான் + "||" + Imprisonment - Aryankhan in the midst of terror criminals

சிறையில் அடைபட்டு தவிப்பு - பயங்கர குற்றவாளிகள் நடுவில் ஆர்யன்கான்

சிறையில் அடைபட்டு தவிப்பு - பயங்கர குற்றவாளிகள் நடுவில் ஆர்யன்கான்
போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ள ஷாருக்கானின் மகனும், இளம் நடிகருமான ஆர்யன்கானை மும்பை ஆர்தர்ரோடு சிறையில் அடைத்துள்ளனர்.
போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ள ஷாருக்கானின் மகனும், இளம் நடிகருமான ஆர்யன்கானை மும்பை ஆர்தர்ரோடு சிறையில் அடைத்துள்ளனர். அவரை ஜாமீனில் வெளியே கொண்டுவர ஷாருக்கான் கடும் முயற்சிகள் எடுத்தும் ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் ஷாருக்கான் மிகுந்த வேதனையில் இருக்கிறார். ஜாமீன் மனு மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது. ஜெயிலில் மற்ற கைதிகளை போலவே ஆர்யன்கான் நடத்தப்படுகிறார். வீட்டு உணவுக்கு அனுமதி இல்லை. ஆர்தர்ரோடு சிறையில் தற்போது 3,200 கைதிகள் உள்ளனர். அவர்களில் பலர் கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு குரூர குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள். அந்த பயங்கர குற்றவாளிகள் நடுவேதான் ஆர்யன்கான் ஒவ்வொரு நாளையும் தவிப்போடு கழித்து வருகிறார். மற்ற கைதிகள் போலவே காலை 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். சிறை உணவுகள் ஆர்யன்கானுக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர் சிறை கேண்டீனில் சாப்பிட ஷாருக்கான் ரூ.4,500 மணி ஆர்டர் அனுப்பி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதில் தி.மு.க. உறுதியாக உள்ளது
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலையில் தி.மு.க. உறுதியாக உள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.
2. தாம்பரத்தில் கல்லூரி மாணவியை கொன்ற என்ஜினீயர் சிறையில் அடைக்கப்பட்டார்
தாம்பரத்தில் கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து கொன்ற என்ஜினீயர், 15 நாள் நீதிமன்ற காவலில் திருவள்ளூரில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
4. ஆப்கானிஸ்தானில் போதிய உணவு இன்றி 1 கோடி குழந்தைகள் தவிப்பு
ஆப்கானிஸ்தானில் போதிய உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் 1 கோடி குழந்தைகள் தவித்து வருகின்றனர்.
5. மதுராந்தகத்தில் குண்டர் சட்டத்தில் 3 பேர் சிறையில் அடைப்பு
மதுராந்தகத்தில் குண்டர் சட்டத்தில் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.