சினிமா செய்திகள்

பிரபல கன்னட நடிகர் மரணம் + "||" + Death of famous Kannada actor

பிரபல கன்னட நடிகர் மரணம்

பிரபல கன்னட நடிகர் மரணம்
பிரபல கன்னட நடிகர் ஷங்கர் ராவ். இவர் பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ஷங்கர் ராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
பிரபல கன்னட நடிகர் ஷங்கர் ராவ். இவர் பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ஷங்கர் ராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. ஷங்கர் ராவ் ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். புனித் ராஜ்குமார் கதாநாயகனாக அறிமுகமான அப்பு படத்தில் கல்லூரி பேராசிரியராக வந்தார். துருவாவுடனும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சில்லி லல்லி வெப் தொடரில் ஷங்கர் ராவ் நடித்த நகைச்சுவை கதாபாத்திரத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. பாபா பாண்டு உள்ளிட்ட மேலும் பல வெப் தொடர்களிலும் நடித்து இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு மூத்த கன்னட நடிகர் கோவிந்த் ராவ் மற்றும் பிரபல நடிகர் சத்யஜித் ஆகியோர் அடுத்தடுத்து மரணம் அடைந்த நிலையில் தற்போது ஷங்கர் ராவும் இறந்து இருப்பது கன்னட திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதி மரணம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இரங்கல்
எம்.ஜி.ஆருக்கு ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய அவரது அண்ணன் மகள் லீலாவதி சென்னையில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
2. நீதிபதி அனுமதியளித்தும் வீட்டுக்குள் போக மறுத்த நடிகர் மன்சூரலிகான்
பிரபல நடிகர் மன்சூரலிகான், அங்கீகாரம் இல்லாமல் வீடு கட்டப்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் சீல் வைத்தார்கள்.
3. விஜய் ஒரு ‘சூப்பர் ஹீரோ’ - பிரபல மலையாள நடிகர் புகழாரம்
நடிகர் விஜய்யின் நடனத்திற்கு தான் தீவிர ரசிகன் என்று பிரபல மலையாள நடிகர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
4. காங்கிரஸ் தலைவர் தஞ்சை ராமமூர்த்தி மரணம்
காங்கிரஸ் தலைவர் தஞ்சை ராமமூர்த்தி மரணம்.
5. பிரபல நடிகை திடீர் மரணம்
மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடரிலும், திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான உமா மகேஸ்வரி குடும்பத்துடன் சென்னை காட்டுப்பாக்கத்தில் வசித்து வந்தார்.