சினிமா செய்திகள்

மன அழுத்தத்தில் நடிகை சமந்தா + "||" + Actress Samantha under stress

மன அழுத்தத்தில் நடிகை சமந்தா

மன அழுத்தத்தில் நடிகை சமந்தா
நடிகை சமந்தா மன அழுத்தத்தில் விடுபட யோகா செய்கிறார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த நடிகை சமந்தா பற்றி குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்தார், கருக்கலைப்பு செய்தார், இன்னொருவருடன் தொடர்பு இருந்தது என்றெல்லாம் வதந்திகள் பரவி வருகின்றன.

இதனால் அவர் மன அழுத்தத்தில் இருக்கிறார். அதில் இருந்து விடுபட யோகா செய்கிறார். இதுகுறித்து சமந்தா அளித்துள்ள பேட்டியில், ‘எனக்கு மன அழுத்தம் உள்ளது. இடைவிடாது படப்பிடிப்புகளில் பங்கேற்கிறேன். ஓய்வில்லாமால் பணியாற்றும்போது மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமானதுதான். மன அழுத்ததில் இருந்து விடுபட உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை செய்கிறேன்.

மேலும் மன அழுத்தம் ஏற்படும்போது நான் மிகவும் விரும்பி வளர்க்கும் எனது நாய் குட்டியுடன் விளையாடுகிறேன். முன்பெல்லாம் வளர்ப்பு பிராணிகள் மன அழுத்தத்தை குறைக்கும் என யாராவது சொன்னால் அதை நம்புவது இல்லை. ஆனால் இப்போது அவைகளோடு சிறிது நேரம் விளையாடினால் போதும் நான் எந்த அளவுக்கு மென்மையாகிறேன் என்பது புரிகிறது. இன்னும் ஓய்வு வேண்டும் என்று நினைத்தால் சினேகிதிகளுடன் சேர்ந்து ஜாலியாக சுற்றுலா செல்ல முயற்சிப்பேன்” என்றார்.