சினிமா செய்திகள்

நடிகை உடையை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய வில்லன் நடிகர் + "||" + Controversial villain actor criticizing actress attire

நடிகை உடையை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய வில்லன் நடிகர்

நடிகை உடையை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய வில்லன் நடிகர்
பிரபல தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ் உடை குறித்து பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் விமர்சித்து இருந்தார். இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சையானது.
பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். இவர் தமிழில் சாமி, கோ, ஏய், லாடம், திருப்பாச்சி, சகுனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

சமீபத்தில் கோட்டா சீனிவாசராவ் அளித்த பேட்டியொன்றில் பிரபல தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ் கவர்ச்சி ஆடைகள் அணிவது தனக்கு பிடிக்கவில்லை என்று விமர்சித்து இருந்தார். இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சையானது.

கோட்டா சீனிவாச ராவுக்கு டுவிட்டரில் அனுசுயா பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘நான் அணியும் உடைகள் பற்றி மூத்த நடிகர் விமர்சித்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. அனுபவம் வாய்ந்த நடிகர் கீழ்த்தரமான கருத்தை தெரிவித்து இருக்கிறார். ஆடை அணிவது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். அந்த மூத்த நடிகர் சினிமாவில் மது அருந்துவது, பெண்களை தவறாக நடத்துவது, அவமானப்படுத்துவது பாராட்டக்கூடியதா? திருமணமாகி குழந்தைகள் பெற்ற பிறகும், நடிகைகளுடன் காதல் செய்து சட்டை அணியாமல் உடலை காட்டும் நடிகர்களை ஏன் கேள்வி கேட்பது இல்லை” என்று கூறியுள்ளார். இந்த மோதல் பரபரப்பாகி உள்ளது.