சினிமா செய்திகள்

சமந்தா கணவரை பிரிய காரணம்...? நடிகை ஸ்ரீ ரெட்டியின் வில்லங்க விளக்கம் + "||" + Why did Samantha break up with her husband Actress Sri Reddy explanation

சமந்தா கணவரை பிரிய காரணம்...? நடிகை ஸ்ரீ ரெட்டியின் வில்லங்க விளக்கம்

சமந்தா கணவரை பிரிய காரணம்...? நடிகை ஸ்ரீ ரெட்டியின் வில்லங்க விளக்கம்
சமந்தா, ப்ரீத்தம் ஜுகல்கருக்குமான நட்பு நிச்சயமாக பிரிவுக்கு காரணமாக இருக்க முடியாது என்று நடிகை ஸ்ரீ ரெட்டி கூறி உள்ளார்.
ஐதராபாத்

சமந்தா என்றாலே சர்ச்சைதான் என்றாகி விட்டது. காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இது தென்னிந்திய திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சமந்தா, நாக சைதன்யா பிரிவுதான் இப்போதுவரைக்கும் தெலுங்கு சினிமாவின் பேசுபொருளாக இருக்கிறது. ஏன் அவர்களுக்குள் விரிசல் என்பதற்கு விடை கண்டுபிடிக்க பலரும் ஆர்வமாக இருக்கின்றனர்.

இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் தான் என்று கூறப்பட்டு வந்தது. சமீபத்தில் இதுகுறித்து விளக்கமளித்த பிரீதம் ஜுகல்கர், சமந்தாவை தான் சகோதரியாக பார்ப்பதாகவும், தங்களுக்கு இடையே தவறான உறவு இல்லை என்றும் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், சமந்தா விவாகரத்து விவகாரம் குறித்து நடிகை ஸ்ரீ ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

பிரீதம் ஜுகல்கர் உடனான நட்பு காரணமாக சமந்தா விவகாரத்து செய்ய வாய்ப்பே இல்லை. ஏனெனில், பிரீதம் ஒரு ஓரினச் சேர்க்கையாளர். அதனால் அவர்களுக்கிடையே எந்தவித தவறான உறவும் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. 

சமீபகாலமாக சமந்தா மிகவும் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். அந்த விஷயத்தில் கூட பிரச்சினை உருவாகி, இருவரின் பிரிவுக்கும் காரணமாகி இருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பேட்டியளிக்கிறார் என்றால் திரையுலகம் கிடுகிடுக்கும். பவன் கல்யாண் தொடங்கி நம்மூர் ஏ.ஆர்.முருகதாஸ் வரை நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என சகல தரப்பினர் மீதும் பாலியல் புகார் வைத்தவர் ஸ்ரீரெட்டி.

தொடர்புடைய செய்திகள்

1. கவர்ச்சியாக ஆடுவதற்கு ரூ.2 கோடி சம்பளம்
கணவரை விட்டு பிரிந்த சமந்தா இப்போது தனிமையில் இருக்கிறார். அவரை ஒரு தெலுங்கு படத்தில், ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடவைக்க பேச்சுவார்த்தை நடந்தது.
2. விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா எடுத்த அதிரடி முடிவு
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
3. உறுதியோடு இருங்கள் என சமந்தாவுக்கு ரகுல் பிரீத் சிங், மஞ்சிமா மோகன் ஆதரவு
சமந்தா வெளியிட்டுள்ள பதிவுக்கு உறுதியோடு இருங்கள் என ரகுல் பிரீத் சிங், மஞ்சிமா மோகன் ஆதரவு அளித்து உள்ளனர்.
4. கணவரை சமந்தா பிரிய இதுதான் காரணமா?
நடிகை சமந்தா, காதல் திருமணம் செய்த நடிகர் நாக சைதன்யாவை பிரிவதற்கான பல காரணங்கள் தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.
5. விவாகரத்துக்கு பின் புதிய வாழ்க்கை பற்றி சமந்தா பதிவு
நடிகை சமந்தா, கணவர் நாகசைதன்யாவை பிரிந்துள்ளார். இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்து உள்ளனர்.