சினிமா செய்திகள்

கோடி கணக்கில் சம்பளம் ...ரோட்டோர கடையில் பேரம் ...! வைரலாகும் நயன்தாரா வீடியோ + "||" + Salary in crores ... Bargain at Rotorua shop ...! Nayantara video goes viral

கோடி கணக்கில் சம்பளம் ...ரோட்டோர கடையில் பேரம் ...! வைரலாகும் நயன்தாரா வீடியோ

கோடி கணக்கில் சம்பளம் ...ரோட்டோர கடையில் பேரம் ...!  வைரலாகும் நயன்தாரா வீடியோ
நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் மராட்டிய மாநிலம் சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர்.
சென்னை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. கேரளாவைச் சேர்ந்த இவர், ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துள்ளார். தவிர ‘நெற்றிக்கண்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகியப் படங்களும் நயன்தாராவின் கைவசம் உள்ளது.இதில் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகிறது. 

நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது.

நானும் ரவுடி தான்’ படத்தின் மூலம் காதலில் விழுந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் பல இடங்களுக்குச் சென்று, அங்கு எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

அதோடு இருவரும் ஜோடியாக பல ஆன்மிக தலங்களுக்கும் சென்று வருகிறார்கள். இந்நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் மராட்டிய மாநிலம் சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர். அதோடு, மும்பையிலுள்ள சித்தி விநாயகர், மகாலட்சுமி கோவில், மும்பதேவி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கும் சென்று வழிபட்டுள்ளனர்.

அப்போது ரோட்டோர கடையில் நயன்தாரா பேரம் பேசுவது போல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது. பேக் கடையில், குறைந்த விலைக்கு பேக்கை கொடுக்குமாறு, அவர் பேரம் பேசுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் வீடு வாங்கி இருக்கிறார்.
2. ஆப்பிள் கலருக்கு மாறிய மைனா நந்தினி ...! அதன் ரகசியத்தை உடைக்கிறார்...!
மைனா நந்தினி கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியாக யூடியூப் சேனலை தொடங்கினார்.
3. துணிச்சல் தான்...!ஹாலிவுட் படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் சமந்தா
நடிகை சமந்தா, தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த பின்னர் அவரது சினிமா செல்வாக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது.
4. ஷாருக்கான் –அட்லீ படத்தில் இணைந்த நயன்தாரா
அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நயன்தாராவே நடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
5. "டியூசன் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார்" பிரபல நடிகை பரபரப்பு தகவல்
பிளிப்கார்ட்டின் லேடீஸ் அண்டு ஜென்டில்மென் சீசன் 2 நிகழ்ச்சியில் “டியூசன் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார்" என தேவோலீனா கூறினார்.