சினிமா செய்திகள்

சிறப்பு வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்தார் சிவகார்த்திகேயன் + "||" + Sivakarthikeyan releasing the special video and thanked

சிறப்பு வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்தார் சிவகார்த்திகேயன்

சிறப்பு வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்தார் சிவகார்த்திகேயன்
'டாக்டர்' படத்தின் வெற்றிக்கு சிறப்பு வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
சென்னை,

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘டாக்டர்’. இப்படம் கடந்த 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகி உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் காமெடி, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என அனைத்தும் படத்தில் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இதனால் டாக்டர் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. 

படத்தின் இந்த  வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு மூன்று மொழிகளில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அவர் அந்தப் பதிவில் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என தமிழிலும் பார்வையாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என தெலுங்கிலும் என் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் சிறப்பு நன்றி என ஆங்கிலத்திலும் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கமல்ஹாசனுடன் கைகோர்க்கிறார் சிவகார்த்திகேயன்..!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
2. முதல் நாள் முதல் ஷோ பார்த்துடுவேன்... சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், ஆர்.ஆர்.ஆர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
3. 'பீஸ்ட்' படத்தின் பாடல் புரோமோவிற்கென பிரத்யேக படப்பிடிப்பு நடத்திய நெல்சன்..!
நடிகர் விஜய், சிவகார்த்திகேயன், நெல்சன், அனிருத் இடம்பெறும் காட்சிகள் நிறைந்த பாடல் புரோமோ வீடியோ வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
4. தனது மூச்சுக்காற்றை செலுத்தி குரங்கை காப்பாற்றிய நபருக்கு நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன் பாராட்டு
நடிகர் சிவகார்த்திகேயனை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் அந்த வீடியோவை பகிர்ந்து பிரபு அவர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
5. மோட்டார் சைக்கிள் விபத்தில் பல் டாக்டர் பலி உடல் உறுப்புகள் தானம்
சென்னை வேளச்சேரியில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த பல் டாக்டர் பலியானார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.