விஷ்ணு விஷாலின் மோகன்தாஸ் படத்தின் செகண்ட் லுக் வெளியானது


விஷ்ணு விஷாலின் மோகன்தாஸ் படத்தின் செகண்ட் லுக் வெளியானது
x
தினத்தந்தி 20 Oct 2021 2:31 PM GMT (Updated: 2021-10-20T20:01:30+05:30)

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'மோகன்தாஸ்' படத்தின் செகண்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.

சென்னை,

டைரக்டர் முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் தயாரிக்கும் திரைப்படம் 'மோகன்தாஸ்'. இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால்  நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன், ஷாரீக் ஹாஸன், லல்லு, பிரகாஷ் ராகவன், பூர்ணிமா பாக்கியராஜ்  உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார், விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முழுமையாக நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து படத்தின் தொகுப்பு மற்றும் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு கோடையில் படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கெனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியிருந்த நிலையில் இன்று படத்தின் செகண்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Next Story