மாநில செய்திகள்

சிலம்பரசன் நடித்த படத்தை தடுத்தால் உண்ணாவிரதம் இருப்பேன் டி.ராஜேந்தர் மனைவி உஷா பேட்டி + "||" + I will be fasting if the film starring Silambarasan is blocked. Interview with T. Rajender's wife Usha

சிலம்பரசன் நடித்த படத்தை தடுத்தால் உண்ணாவிரதம் இருப்பேன் டி.ராஜேந்தர் மனைவி உஷா பேட்டி

சிலம்பரசன் நடித்த படத்தை தடுத்தால் உண்ணாவிரதம் இருப்பேன் டி.ராஜேந்தர் மனைவி உஷா பேட்டி
சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு படத்தை தீபாவளிக்கு வெளிவர விடாமல் தடுத்தால் உண்ணாவிரதம் இருப்பேன் என்று டி.ராஜேந்தருடன் இணைந்து உஷா ராஜேந்தர் பேட்டி கொடுத்தார்.
சென்னை,

சினிமா பட இயக்குனர் நடிகர் டி.ராஜேந்தர் நேற்று தனது மனைவி உஷா ராஜேந்தருடன் வந்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் இருவரும் தனித்தனியாக பேட்டி கொடுத்தனர். டி.ராஜேந்தர் கூறியதாவது:-


கட்டப்பஞ்சாயத்து

தமிழ் சினிமாவில் சிலர் நடப்பு வினியோகிஸ்தர் சங்கம் என்ற பெயரில் கட்டபஞ்சாயத்து செய்து வருகின்றனர். தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு சிம்பு எந்த பணமும் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் சிம்பு பணம் கொடுக்க வேண்டும் என்று, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சிலர் மறைமுகமாக செயல்படுகின்றனர். இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். இந்த கட்டபஞ்சாயத்து கும்பல் மீதும், சிவப்பு கார்டு போடும் கும்பல் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளோம். இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து கும்பலை களை எடுப்பதற்காக ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையம் என்ன ஆனது. எல்லா நடிகர்களுக்கும் இது போன்ற பிரச்சினை உள்ளது. டெல்லி வரை நான் இந்த பிரச்சினையை கொண்டு செல்வேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உண்ணாவிரதம் இருப்பேன்

உஷா ராஜேந்தர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தொடர்ச்சியாக சிம்பு நடித்து வரும் படங்களுக்கு சிவப்பு கார்டு போடுகிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை சிலர் தவறாக பயன்படுத்தி மிரட்டுகிறார்கள். சிம்பு நடித்துள்ள மாநாடு படம் வெளிவர விடாமல் தடுக்கிறார்கள்.

தீபாவளிக்கு சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தை வெளிவர விடாமல் தடுத்தால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்லும் வகையில் அவரது வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருக்கவும் தயாராக உள்ளேன்.

இவ்வாறு உஷாராஜேந்தர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. வேதா இல்லத்தை மீட்க மேல்முறையீடு எடப்பாடி பழனிசாமி பேட்டி
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை மீட்கும் வகையில், கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
2. தமிழகத்தில் 451 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
தமிழகத்தில் 451 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
3. ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு வரவேற்பு: ‘மேல்முறையீடு செய்தாலும் சட்டரீதியாக சந்திப்போம்’ ஜெ.தீபா பேட்டி
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கியிருக்கும் தீர்ப்புக்கு ஜெ.தீபா வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் மேல்முறையீடு செய்தாலும் சட்டரீதியாக சந்திப்போம் என அவர் கூறியுள்ளார்.
4. ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ரத்து விவகாரம்: ‘அ.தி.மு.க. தலைமை உரிய நேரத்தில் முடிவு எடுக்கும்’
ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ரத்து செய்யப்பட்டது குறித்து அ.தி.மு.க. தலைமை உரிய நேரத்தில் முடிவு எடுக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
5. மருத்துவ கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்கள் சேர்க்கை கடந்த ஆண்டைவிட கூடுதலாக இருக்கும்
மருத்துவ கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்கள் சேர்க்கை கடந்த ஆண்டைவிட கூடுதலாக இருக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.