சினிமா செய்திகள்

அன்பான மதுரை மக்களே! நடிகை சினேகா விழிப்புணர்வு வீடியோ வெளியீடு + "||" + Actress Sneha Awareness Video Release

அன்பான மதுரை மக்களே! நடிகை சினேகா விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

அன்பான மதுரை மக்களே! நடிகை சினேகா விழிப்புணர்வு வீடியோ வெளியீடு
சனிக்கிழமை நடைபெறும் தடுப்பூசி முகாம்களில், மக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென நடிகை சினேகா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.
சென்னை,

அந்த வீடியோவில், “அன்பான மதுரை மக்களே, மதுரை மாநகராட்சி சார்பில் வரும் சனிக்கிழமை உயிரை காக்கும் கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த தடுப்பூசி முகாமில் அனைவரும் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்றார் அவர். இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

ஏற்கெனவே தடுப்பூசி முகாம் குறித்து நடிகை சினேகாவின் கணவர் பிரசன்னா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.