ஜீவா-சிவா இணைந்து கலக்கும் ‘கோல்மால்’


ஜீவா-சிவா இணைந்து கலக்கும் ‘கோல்மால்’
x
தினத்தந்தி 21 Oct 2021 4:24 PM GMT (Updated: 2021-10-21T21:54:29+05:30)

ஜீவாவும், சிவாவும் ஒரு முழுநீள நகைச்சுவை படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு ‘கோல்மால்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார் ஆகிய இருவரிடமும் பணிபுரிந்தவரும், பல கன்னட படங்களை இயக்கியவருமான பொன்குமரன், இந்த படத்தை டைரக்டு செய்கிறார். அவர் கூறும்போது...

“இது, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஜனரஞ்சகமான படமாக இருக்கும். அனைவரையும் மகிழ்விக்கும். ஜீவாவும், சிவாவும் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். அவர்கள் கூட்டணி அமைக்கும்போது, இன்னும் சிறப்பாக இருக்கும்.

பாயல் ராஜ்புத், தான்யா ஹோப் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சோனியா அகர்வால், யோகிபாபு, மனோபாலா, ரமேஷ்கண்ணா, கருணாகரன், நரேன், மொட்டை ராஜேந்திரன், பஞ்சு சுப்பு, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். பி.வினோத் ஜெயின் தயாரிக்கிறார்” என்றார்.


Next Story