சினிமா செய்திகள்

கோவிலுக்குள் மர்மம்; புதை பொருள் ஆராய்ச்சியாளராக கதாநாயகன் + "||" + Mystery within the temple; The protagonist as an archaeologist

கோவிலுக்குள் மர்மம்; புதை பொருள் ஆராய்ச்சியாளராக கதாநாயகன்

கோவிலுக்குள் மர்மம்; புதை பொருள் ஆராய்ச்சியாளராக கதாநாயகன்
சிபி சத்யராஜ் திரையுலகுக்கு வந்து 18 வருடங்கள் ஆகின்றன. இதுவரை அவர் 17 படங்களில்தான் நடித்து இருக்கிறார். அவருடைய 17-வது படம், ‘மாயோன்.’ இதில், அவர் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக நடித்து இருக்கிறார். அவருடைய காதலியாக-தொல்பொருள் ஆராய்ச்சி அணியில் ஒருவராக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார்.
இது, ஒரு கோவிலுக்குள் புதைந்து கிடக்கும் மர்மம் பற்றிய கதை. அந்த மர்மம் வெளிப்பட்டதா, இல்லையா? என்பது ‘சஸ்பென்ஸ்’ என்கிறார்கள், படக்குழுவினர். அவர்கள் மேலும் கூறுகையில்...

‘‘படத்துக்காக புதுக்கோட்டையில், ஒரு கோவில் அரங்கு அமைக்கப்பட்டு அங்கு படப்பிடிப்பு 40 நாட்கள் நடைபெற்றன. அத்துடன் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இப்போது பின்னணி இசை சேர்ப்பு பணி நடைபெறுகிறது’’ என்றார்கள்.