சினிமா செய்திகள்

டைரக்டர் ராம் இயக்கத்தில் 3-வது முறையாக இணைந்தார், அஞ்சலி + "||" + Director Ram joins the new film for the 3rd time, Anjali

டைரக்டர் ராம் இயக்கத்தில் 3-வது முறையாக இணைந்தார், அஞ்சலி

டைரக்டர் ராம் இயக்கத்தில் 3-வது முறையாக இணைந்தார், அஞ்சலி
அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் ஆகிய படங்களை தயாரித்த வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில், ‘மாநாடு’ என்ற படத்தை தயாரித்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த நிறுவனம் ராம் இயக்கத்தில் தனது 5-வது படத்தை தயாரிக்கிறது.
படப்பிடிப்பு ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் தொடங்கியது. இதில் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். கற்றது தமிழ், பேரன்பு ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ராம் இயக்கத்தில், அஞ்சலி நடிக்கிறார்.

‘‘மேலும் இந்த படத்தில், முக்கிய வேடத்தில் சூரி நடிக்கிறார். தரமான கதையம்சம் உள்ள படங்களை இயக்கி, தேசிய விருதும் பெற்ற டைரக்டர் ராம், இந்த படத்துக்காகவும் தேசிய விருதை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது’’ என்கிறார்கள் படக்குழுவினர்.

தொடர்புடைய செய்திகள்

1. 5-ந் தேதி நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி
5-ந் தேதி நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி.
2. இந்திராகாந்தி பிறந்த தினம்: பிரதமர் மோடி மரியாதை
இந்திராகாந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
3. புனித் ராஜ்குமார் உடலுக்கு கர்நாடக முதல்-மந்திரி, கவர்னர் நேரில் அஞ்சலி
கர்நாடகாவில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
4. காந்திக்கு பிறகு காலம் நமக்கு தந்த இன்னொரு தேசப்பிதா - அப்துல் கலாமுக்கு, கமல்ஹாசன் புகழ் அஞ்சலி
காந்திக்கு பிறகு காலம் நமக்கு தந்த இன்னொரு தேசப்பிதா - அப்துல் கலாமுக்கு, கமல்ஹாசன் புகழ் அஞ்சலி.
5. சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்; பிரதமர் மோடி அஞ்சலி
இந்திய விடுதலை போராட்ட வீரர் பகத் சிங்கின் பிறந்த தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.