சினிமா செய்திகள்

வேதனையாக இருக்கிறது.. உதவுங்கள் பிரதமர் மோடி.. நடிகை சுதா சந்திரன் உருக்கமான வேண்டுகோள்! + "||" + Sudhaa Chandran asked to remove 'artificial limb’ on airports, actress requests PM Modi's help

வேதனையாக இருக்கிறது.. உதவுங்கள் பிரதமர் மோடி.. நடிகை சுதா சந்திரன் உருக்கமான வேண்டுகோள்!

வேதனையாக இருக்கிறது.. உதவுங்கள் பிரதமர் மோடி.. நடிகை சுதா சந்திரன்  உருக்கமான  வேண்டுகோள்!
ஏர்போர்ட் போன்ற பெரிய இடங்களில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கு போதுமான வசதிகள் இல்லை என்ற அவலம் நம் நாட்டில் நிலவுகிறது.
புதுடெல்லி

இந்திய பரதநாட்டியக் கலைஞர், இந்திய மொழி திரைப்படங்களிலும், சின்னத் திரை தொடர்களிலும் நடித்த பிரபல நடிகை, நடன நிகழ்ச்சிகளில் நடுவர் என பன்முகத் திறமையாளராக வலம் வருபவர் சுதா சந்திரன்

'காஹின் கிஸ்ஸி ரோஸ்' போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் , 'நாகின்' தொடர்களிலும் நடித்து பிரபலமானவர்  சுதா சந்திரன். 

நடிகை சுதா சந்திரன் தனது  இன்ஸ்டாகிராமில் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு அடையாள அட்டையை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம்  உருக்கமான வேண்டுகோள் விடுத்து உள்ளார்.  தன்னைப் போன்ற மூத்த குடிமக்கள் விமான நிலைய அதிகாரிகளால் "அவமானப்படுத்தப்படுவதை" தவிர்க்கலாம் என்று நடிகை கூறி உள்ளார்.

செயற்கை மூட்டுகளைப் பயன்படுத்தும் சுதா, ஒவ்வொரு முறையும் "வலிக்கிறது" என்று கூறி "கிரில்ஸ்" பாதுகாப்பு மூலம் தனது துன்பத்தை பகிர்ந்து உள்ளார்.

அவர் தனது வீடியோவில் கூறி இருப்பதாவது:-

" மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஒரு வேண்டுகோள்""நான் சுதா சந்திரன், ஒரு நடிகர் மற்றும் நடனக் கலைஞர், நான் ஒரு செயற்கை மூட்டுடன் நடனமாடி வரலாற்றை உருவாக்கி, என் நாட்டை பெருமைப்படுத்தினேன். . ஆனால் ஒவ்வொரு முறையும் நான் எனது தொழில்முறை பயணம்  செல்லும்போது,, நான் விமான நிலையத்தில் நிறுத்தப்படுகிறேன், என் செயற்கை  மூட்டு உறுப்பை அகற்றி அவர்களிடம் காட்ட வேண்டும் என்று அவர்கள்  விரும்புகிறார்கள். அது மனிதனால் சாத்தியமா மோடிஜி? 

"நம் நாடு இதைப் பற்றி பேசுகிறதா? நம் சமூகத்தில் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு கொடுக்கும் மரியாதையா இது? மூத்த குடிமக்களுக்கு  ஒரு சிறப்பு அடையாள அட்டையை வழங்குங்கள் என்பதே எனது பணிவான வேண்டுகோள்.

 விமான நிலையத்தில் இருந்து அவர் இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார். ஒவ்வொரு முறையும் இந்த கிரில் வழியாக செல்லும் போது மிகவும் வலிக்கிறது .... எனது செய்தி மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு சென்றடையும் என்று நம்புகிறேன் .... உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன்.  என கூறி உள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. படபிடிப்பில் காயம் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்ட நடிகை...!
கையில் காயம் பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.
2. படபிடிப்பில் காயம் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்ட நடிகை...!
மாளவிகா மோகனன் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியொன்றை மும்பையில் உள்ள ஸ்டூடியோவில் படமாக்கினர்
3. ஆப்பிள் கலருக்கு மாறிய மைனா நந்தினி ...! அதன் ரகசியத்தை உடைக்கிறார்...!
மைனா நந்தினி கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியாக யூடியூப் சேனலை தொடங்கினார்.
4. துணிச்சல் தான்...!ஹாலிவுட் படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் சமந்தா
நடிகை சமந்தா, தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த பின்னர் அவரது சினிமா செல்வாக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது.
5. "டியூசன் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார்" பிரபல நடிகை பரபரப்பு தகவல்
பிளிப்கார்ட்டின் லேடீஸ் அண்டு ஜென்டில்மென் சீசன் 2 நிகழ்ச்சியில் “டியூசன் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார்" என தேவோலீனா கூறினார்.