சினிமா செய்திகள்

விஷால் படத்துக்கு சிக்கல் + "||" + Problem for Vishal film

விஷால் படத்துக்கு சிக்கல்

விஷால் படத்துக்கு சிக்கல்
தீபாவளி பண்டிகையில் ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் எனிமி, சிம்புவின் மாநாடு ஆகிய 3 படங்கள் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மாநாடு படம் திடீரென்று போட்டியில் இருந்து விலகி கொண்டது. இறுதியில் அண்ணாத்த, எனிமி ஆகிய 2 படங்களும் மோதுவது உறுதியானது. இந்த நிலையில் அதிக தியேட்டர்களில் அண்ணாத்த படத்தை திரையிட நிர்ப்பந்திப்பதாகவும், எனிமி படத்துக்கு தேவையான தியேட்டர்களை ஒதுக்க மறுப்பதாகவும் புகார் கிளம்பி உள்ளது.

இதுகுறித்து எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத் ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசும்போது, ‘‘தீபாவளிக்கு எனிமியுடன் வெளியாகும் இன்னொரு பெரிய படத்தைத்தான் தியேட்டர்களில் திரையிட வேண்டும் என்று வற்புறுத்துவதாக தகவல் வருகிறது. சினிமாவுக்கு இது ஆரோக்கியமான விஷயம் இல்லை.

எனிமி படத்தை ஓ.டி.டி. தளம் வாங்க முன்வந்தும் நான் தியேட்டரில் திரையிட முடிவு செய்தேன். இந்த பிரச்சினையில் தயாரிப்பாளர்கள் சங்கம் எனக்கு உதவ வேண்டும். எனிமிக்கு 250 தியேட்டர்கள் போதும். எனிமி படத்துக்கு தியேட்டர்கள் ஒதுக்காவிட்டால் அதை எதிர்த்து போராடுவேன்” என்று கூறியுள்ளார்.