சினிமா செய்திகள்

ஹாலிவுட் நடிகர் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் பலி + "||" + Cinematographer Halyna Hutchins dies after prop gun fired by Alec Baldwin malfunctions

ஹாலிவுட் நடிகர் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் பலி

ஹாலிவுட் நடிகர் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் பலி
பிரபல ஹாலிவுட் நடிகர் அலெக் பால்ட்வின். இவர் ஜோயல் சோசா இயக்கத்தில் தயாராகும் ‘ரஸ்ட்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோவில் உள்ள சாண்டா பகுதியில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.
படப்பிடிப்பு அரங்கில் வெடித்தால் சத்தம் மட்டுமே வரும் ஒரு போலி துப்பாக்கியை வைத்து இருந்தனர். சண்டை காட்சியில் அந்த போலி துப்பாக்கியால் அலெக் பால்ட்வின் சுடுவது போன்று படமாக்கினார்கள். அலெக் பால்ட்வின் சுட்டபோது அந்த துப்பாக்கியில் இருந்து உண்மையாகவே குண்டு பாய்ந்து பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் பலியானார். இயக்குநர் ஜோயல் சோசா படுகாயம் அடைந்தார்.

இதைபார்த்து படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள். படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. ஜோயலின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

படப்பிடிப்பு தளங்களில் துப்பாக்கி பயன்படுத்த கட்டுப்பாடுகள் உள்ளன. ஏற்கனவே தி கிரோ படப்பிடிப்பில் சினிமா துப்பாக்கியால் சுட்டதில் புரூஸ் லீயின் மகன் பிரான்டன் லீ உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கி சூடு சம்பவம் ஹாலிவுட் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.