சினிமா செய்திகள்

அம்மா வேடத்தில் நடிப்பதில் மகிழ்ச்சிதான்: சீதா + "||" + Happy to play the role of mother: Sita

அம்மா வேடத்தில் நடிப்பதில் மகிழ்ச்சிதான்: சீதா

அம்மா வேடத்தில் நடிப்பதில் மகிழ்ச்சிதான்: சீதா
1986-ல் வெளிவந்த ‘ஆண்பாவம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், சீதா. இவருடைய சொந்த பெயர், சைலேந்திரனி. படத்துக்காக பெயர் மாற்றம் செய்தவர், டைரக்டர் பாண்டியராஜன்.
சைலேந்திரனி என்ற சீதா கதாநாயகியாக (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில்) 100 படங்களிலும், அம்மா வேடத்தில் 60 படங்களிலும் நடித்து இருக்கிறார். அழகான முகவசீகரம் கொண்ட அம்மா நடிகைகளில் இவரும் ஒருவர்.

‘‘கதாநாயகியாக நடித்து வந்த நீங்கள் அம்மா வேடம் போட வேண்டியிருக்கிறதே...என்று வருத்தப்படுகிறீர்களா?’’ என்று கேட்டதற்கு சீதா சிரித்தபடி பதில் அளித்தார்.

‘‘அம்மா வேடத்தில் நடிப்பதற்கு நான் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. அம்மாவாக நடிப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். டான்ஸ் ஆட வேண்டியதில்லை. மரத்துக்கு மரம் ஓடிப்பிடித்து டூயட் பாட வேண்டியதில்லை...’’ என்கிறார், சீதா.