சினிமா செய்திகள்

பால் வாக்கர் மகளின் திருமணத்தில் தந்தை ஸ்தானத்தில் வின் டீசல்..! + "||" + Vin Diesel in father position at Paul Walker's daughter's wedding ..!

பால் வாக்கர் மகளின் திருமணத்தில் தந்தை ஸ்தானத்தில் வின் டீசல்..!

பால் வாக்கர் மகளின் திருமணத்தில் தந்தை ஸ்தானத்தில் வின் டீசல்..!
பால் வாக்கரின் மகள் மீடோ வாக்கரின் திருமண நிகழ்வில் தந்தை ஸ்தானத்தில் வின் டீசல்.
சாண்டோ டொமிங்கோ,

பாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் திரைப்படத்தின் முதல் ஆறு பாகங்களில் நடித்தவர் பிரபல நடிகர் பால் வாக்கர். இவர் கடந்த 2013 ம் ஆண்டில் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகளும் பிரபல மாடலுமான மீடோ வாக்கர் டொமினிகன் குடியரசில் நடிகர் லூயிஸ் ஆலனை மணந்தார். இவர்களின் திருமணம் நேற்று நடந்தது.

இந்தத் திருமண நிகழ்வின் புகைப்படங்களை மீடோ வாக்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். இந்த புகைப்படத்தில் மீடோ வாக்கருக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து கரம்பிடித்துக் கொடுத்தது பால் வாக்கருடன் பாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் திரைப்படத்தில் இணைந்து நடித்த வின் டீசல். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்த திருமண நிகழ்வில் பால் வாக்கரின் காதலியாக நடித்த ஜோர்டானா புரூஸ்டரும் கலந்து கொண்டார்.