சினிமா செய்திகள்

"நடிகர் அஜித்தை எவராலும் தடுக்க முடியாது" - 'வலிமை' திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் டுவீட் + "||" + Nothing can stop him from living his passion and making his each dream come true Boney Kapoor

"நடிகர் அஜித்தை எவராலும் தடுக்க முடியாது" - 'வலிமை' திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் டுவீட்

"நடிகர் அஜித்தை எவராலும் தடுக்க முடியாது" - 'வலிமை' திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் டுவீட்
பொங்கலை முன்னிட்டு திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
சென்னை,

நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து பொங்கலை முன்னிட்டு திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. 

இந்தப் படத்தில்  யுவன் இசையில் வேற மாறி பாடல், கிலிம்ப்ஸ் விடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக நடிகர் அஜித், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் கூட்டணி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் நடிகர் அஜித் தனது பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சமீபத்தில் மாரல் யாஜர்லு என்பவரை சந்தித்து உலகப் பயணம் குறித்து கேட்டறிந்தார்.  தனது பைக்கில் இந்திய எல்கைக்கு சென்ற அவர் அங்கு ராணுவ வீரர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். 

இந்த நிலையில் வலிமை பட தயாரிப்பாள் போனி கபூர் தனது  டுவிட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்தின் பயண புகைப்படங்களைப் பகிர்ந்து, அவரது லட்சியத்துக்காக அவர் வாழ்வதை, கனவுகளை நிஜமாக்க உழைப்பதை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது'' என புகழாரம் தெரிவித்துள்ளார்.