சினிமா செய்திகள்

தனுஷின் மாறன் ஓடிடியில் வெளியாகிறதா? + "||" + Is Dhanush's Maaran released on OTT?

தனுஷின் மாறன் ஓடிடியில் வெளியாகிறதா?

தனுஷின் மாறன் ஓடிடியில் வெளியாகிறதா?
மாறன் திரைப்படத்தின் உரிமத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வாங்க இருப்பதால் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகும்.
சென்னை,

தனுஷ் நடிப்பில் டைரக்டர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் மாறன் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் பத்திரிக்கையாளர்கள் வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் மாறன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் நேரடி ஓடிடி ஸ்ட்ரீமிங்கிற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அந்த உரிமத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வாங்க இருப்பதாகவும் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் எனவும் செய்திகள் பரவி வருகின்றன. 

இது தனுஷின் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மாறனின் ஓடிடி வெளியீடு குறித்து நடிகர் தனுஷின் ரசிகர்கள் டுவிட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் ஓடிடி-யில் தனுஷ் படம்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஓடிடி-யில் நேரடியாக வெளியாகும் என்ற தகவல் வெளியாகிருக்கிறது.
2. தனுஷின் பாலிவுட் திரைப்படம்: வெளியானது டிரைலர்...!
படத்தின் டிரைலரில் நடிகர் தனுஷ் தமிழில் பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
3. 'மாறன்' திரைப்படத்தின் ஆடியோ விரைவில் வெளியாகிறது
தனுஷ் நடிக்கும்'மாறன்'திரைப்படத்தின் புதிய அப்டேட் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இன்று வெளியிட்டுள்ளார்.
4. 'எப்.ஐ.ஆர்' வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் - விஷ்ணு விஷால்
‘எப்.ஐ.ஆர்’ படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
5. தனுசின் 'நானே வருவேன்' படப்பிடிப்பு தொடங்கியது
நடிகர் தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக அதன் தயாரிப்பாளர் தெரிவித்து உள்ளார்.