சினிமா செய்திகள்

வலைத்தள அவதூறுகள்: நடிகை சமந்தா வருத்தம் + "||" + Website slanders: Actress Samantha upset

வலைத்தள அவதூறுகள்: நடிகை சமந்தா வருத்தம்

வலைத்தள அவதூறுகள்: நடிகை சமந்தா வருத்தம்
நடிகை சமந்தாவின் விவாகரத்தை வலைத்தளங்கள் அவதூறாக சித்தரித்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து சில யுடியூப் சேனல்கள் மீது சமந்தா நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் வலைத்தளங்கள் குறித்து சமந்தா அளித்துள்ள பேட்டியில், ‘‘சமூக வலைத்தளங்களால் எவ்வளவு லாபம் உள்ளதோ அந்த அளவுக்கு நஷ்டமும் உள்ளது. நாம் இப்போது டிஜிட்டல் உலகில் இருக்கிறோம். இந்த காலத்திலும் சமூக வலைத்தளத்தை விட்டு விலகி இருக்கவே தோன்றுகிறது.

 சமூக வலைத்தளத்தில் வரும் பதிவுகள் எல்லை மீறி போகும் அளவுக்கு இருக்க கூடாது. கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். சமூக வலைத்தளத்தில் வரும் பதிவுகளை பற்றி பேசுவதை விட சிலமுறை மவுனமாக இருப்பதே நல்லது. பதில் சொல்ல வேண்டி வந்தால் அது மவுனத்தை விட பலமாக இருக்க வேண்டும். 

தென்னிந்திய படங்களில் நான் பிசியாக இருந்தபோது இந்தி பட வாய்ப்புகள் வந்தன. எனவே அப்போது நிராகரித்தேன். ஆனால் பேமிலி மேன் 2 வெப் தொடரில் ராஜி கதாபாத்திரத்தை ரசிகர்கள் வரவேற்ற விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இத்தொடர் எனக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது” என்றார்.தொடர்புடைய செய்திகள்

1. துணிச்சல் தான்...!ஹாலிவுட் படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் சமந்தா
நடிகை சமந்தா, தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த பின்னர் அவரது சினிமா செல்வாக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது.
2. வழக்கு எதற்கு, மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்கலாம்: சமந்தாவுக்கு நீதிமன்றம் அறிவுரை
தனது திருமண வாழ்க்கை குறித்தும், தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் தவறாக பேசிய வழக்கறிஞர் மீது நீதிமன்றத்தில் நடிகை சமந்தா வழக்கு தொடர்ந்துள்ளார்
3. கருக்கலைப்பு வதந்திகள் எதுவும் என்னை பாதிக்காது - நடிகை சமந்தா
விவாகரத்தை தொடர்ந்து தன்னை சுற்றும் வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் சமந்தா தனது சமூக வலைதளத்தில் பதில் அளித்து உள்ளார்.
4. மீண்டும் சர்ச்சையில் நடிகை சமந்தா
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவும் காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர்.