ஏமாற்றங்களை சந்தித்த நடிகை அமலாபால்


ஏமாற்றங்களை சந்தித்த நடிகை அமலாபால்
x
தினத்தந்தி 28 Oct 2021 4:38 AM GMT (Updated: 2021-10-28T10:08:15+05:30)

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அமலாபால் தற்போது கடாவர் என்ற படம் மூலம் தயாரிப்பாளராகி உள்ளார்.

இந்த படத்தில் அமலாபால் தடயவியல் அறுவை சிகிச்சை மருத்துவராகவும் நடிக்கிறார். வாழ்க்கை, சினிமா அனுபவங்கள் குறித்து அமலாபால் அளித்துள்ள பேட்டியில், ‘‘தயாரிப்பாளரானது உடனடியாக எடுத்த முடிவு அல்ல. பல வருடங்களாக திறமையான இயக்குனர்கள், எழுத்தாளர்கள் போன்றோரை சந்தித்து நிறைய கற்றுக்கொண்டே தயாரிப்பாளராகி இருக்கிறேன்.

சில தயாரிப்பாளர்கள் பணம் இல்லாமல் படங்கள் தயாரித்தது ஏமாற்றம் அளித்தது. அவர்களுக்கு போட்ட பணத்தை எடுக்க முடியும் என்ற நம்பிக்கையும் இல்லாமல் இருந்தது. நான் நம்பிய சிலரும் என்னை ஏமாற்றுவார்கள் என்று தெரியாமல் போனது.

வாழ்க்கையில் சில அனுபவ பாடங்களை கடினமான வழியில் கற்றேன். தற்போது மக்களை பற்றி எனக்கு நிறைய தெரியும். இது எல்லாம் வாழ்க்கை பாடம். திறமையான நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு எனது பட தயாரிப்பு நிறுவனம் வாய்ப்புகள் வழங்கும்” என்றார்.


Next Story