எஸ்.ஜே.சூர்யா மகிழ்ச்சி


எஸ்.ஜே.சூர்யா மகிழ்ச்சி
x
தினத்தந்தி 28 Oct 2021 4:42 AM GMT (Updated: 2021-10-28T10:12:57+05:30)

இயக்குனராகவும், கதாநாயகனாகவும் ரசிகர்களை கவர்ந்த எஸ்.ஜே.சூர்யா தற்போது மற்ற நடிகர்கள் படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

விஜய்யின் மெர்சல் படத்துக்காக சிறந்த வில்லன் நடிகர் விருதை பெற்றார். தற்போது சிம்புவுடன் மாநாடு, சிவகார்த்திகேயனுடன் டான் படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் அவரது கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகவில்லை. கடமையை செய் என்ற படமும் கைவசம் உள்ளது.

தீபாவளி பண்டிகையில் திரைக்கு வருவதாக இருந்த மாநாடு படம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. எஸ்.ஜே.சூர்யா டப்பிங் பேசி முடித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘மாநாடு படத்தில் எனது கதாபாத்திரத்துக்கான டப்பிங் பேசினேன். 8 நாட்களில் முடிக்க வேண்டிய டப்பிங்கை 5 நாட்களில் முடித்தேன். இதனால் எனது நாடி நரம்பு, கழுத்து, முதுகு தண்டு, தொண்டை பகுதிகள் பாதித்து 10 நாட்கள் ஓய்வு கேட்டு கெஞ்சுகின்றன. கடுமையான பணி, வலி இருந்தாலும் இறுதியில் படத்தை பார்த்தவுடன் இந்த படம் வெளியாகும் தேதியில்தான் தீபாவளி என்று சொல்ல தோன்றுகிறது” என்று மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.


Next Story