“மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்” - நடிகர் சூர்யா டுவீட்


“மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்” - நடிகர் சூர்யா டுவீட்
x
தினத்தந்தி 28 Oct 2021 6:54 AM GMT (Updated: 2021-10-28T12:24:39+05:30)

“அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்” என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாலா - சூர்யா கூட்டணி 'நந்தா', 'பிதாமகன்' ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளது. அதற்குப் பிறகு பாலா வெவ்வேறு நாயகர்களை இயக்கி வந்தாலும், அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டவர் சூர்யா. இருவரும் மீண்டும் இணைந்து பணிபுரிவது குறித்து நீண்ட நாட்களாகவே பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள்.

இந்தநிலையில், நடிகர் சூர்யா டுவிட்டர் பதிவில், 

என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்…ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்…அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்... அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்… என பதிவிட்டுள்ளார்.

Next Story