தேசிய விருது பெற்ற நடிகர் பார்த்திபன் முதல்-அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்...


தேசிய விருது பெற்ற நடிகர் பார்த்திபன் முதல்-அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்...
x
தினத்தந்தி 28 Oct 2021 4:30 PM GMT (Updated: 2021-10-28T22:04:01+05:30)

தேசிய விருது பெற்ற நடிகர் பார்த்திபன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னை,

67 வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டிருந்தன. அந்த விருதுகள் கடந்த திங்கள்கிழமை டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.

அதில், ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்திற்காக சிறப்பு ஜூரி விருது நடிகர் பார்த்திபனுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், சிறப்பு ஜூரி விருது பெற்ற நடிகர் பார்த்திபன் இன்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Next Story