சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன


சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன
x
தினத்தந்தி 29 Oct 2021 5:05 AM GMT (Updated: 2021-10-29T10:35:57+05:30)

காதல் திருமணம் செய்து கொண்ட சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிந்து விட்டார்கள். கணவரை பிரிந்த பின்சமந்தாவுக்கு புது பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன.

பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திரு மணம் செய்து கொண்ட சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிந்து விட்டார்கள். இவர்களின் 14 வருட காதல் முறிந்து போனது. இருவரும் விவாகரத்து செய்துகொள்ள முடிவு செய்து இருக்கிறார்கள்.

இரண்டு பேரின் பிரிவும் அவர்களின் தொழிலை பாதிக்குமோ என்று நண்பர்களும், உறவினர்களும் கவலைப்பட்டார்கள். அதற்கு அவசியமே இல்லை என்பது போல், சமந்தாவுக்கு புது பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன. அந்த வாய்ப்புகளில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படமும் ஒன்று.

இன்னும் பெயர் சூட்டப்படாத அந்த படத்தை சாந்தரூபன் ஞானசேகரன் டைரக்டு செய்கிறார். இவர் டைரக்டர்கள் நெல்சன் வெங்கடேசன், தேசிங்கு பெரியசாமி ஆகிய இருவரிடமும் உதவி டைரக்டராக இருந்தவர். ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

அந்த பெண் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக் கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகிறது.

சமந்தா நடிக்கும் மற்றொரு படத்தை ஹரி சங்கர், ஹரி நாராயணன் ஆகிய இருவரும் இயக்குகிறார்கள். சிவலிங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார். இதேபோல் நாக சைதன்யாவும் 2 புதிய தெலுங்கு படங்களில் நடிக்க கையெழுத்திட்டு இருக்கிறாராம்.


Next Story