மாநில செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் - மருத்துவமனை நிர்வாகம் + "||" + Rajinikanth May Discharged form Hospital in a Few days

நடிகர் ரஜினிகாந்த் ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் - மருத்துவமனை நிர்வாகம்

நடிகர் ரஜினிகாந்த் ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் - மருத்துவமனை நிர்வாகம்
நடிகர் ரஜினிகாந்த் ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் என தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நேற்று பகல் 12.30 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் சென்றுள்ளார். காரில் இருந்து இறங்கி நடந்தே தான் மருத்துவமனைக்குள் சென்றிருக்கிறார். அவருடன் மகள் சவுந்தர்யாவும், அவருடைய கணவரும் சென்றுள்ளனர்.

தற்போது ரஜினிகாந்த் மருத்துவமனையின் 5-வது மாடியில் உள்ள சாதாரண அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினிகாந்திற்கு ரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் தற்போது உடல்நலம் தேறி வருகிறார். ரஜினிகாந்த் இன்னும் ஓரு சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. போயஸ் கார்டனில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் பொங்கல் வாழ்த்து..!
சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
2. தெய்வமே என ரசிகர்கள் கோஷம்...! நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து
சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினி ரசிகர்கள் அவர் வீட்டின் முன்பு திரண்டனர்.
3. ரஜினிகாந்திற்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து
ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து ரசிகர்களை மகிழ்விக்க மனதார வாழ்த்துவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
4. நடிகர் ரஜினிகாந்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்து
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 72-வது வயதில் இன்று அடியெத்து வைத்துள்ள நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
5. ரஜினிகாந்த் நடித்த ‘முரட்டுக்காளையை மறக்க முடியாது’ - ஜூடோ ரத்னம்
தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஸ்டண்ட் மாஸ்டர்களில் முக்கியமானவர் ஜூடோ ரத்னம். இவர் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டை காட்சிகள் அமைத்து கொடுத்து இருக்கிறார்.