66-வது படத்தில் விஜய் ஜோடியாக கியாரா அத்வானி?


66-வது படத்தில் விஜய் ஜோடியாக கியாரா அத்வானி?
x
தினத்தந்தி 29 Oct 2021 4:46 PM GMT (Updated: 2021-10-29T22:16:54+05:30)

66-வது படத்தில் விஜய் ஜோடியாக கியாரா அத்வானியிடம் படக்குழுவினர் பேசிவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் நடிக்கும் பீஸ்ட் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. கதாநாயகியாக பூஜா ஹெக்டே வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்க உள்ள அவரது 66-வது படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி பைடி பல்லி இயக்க இருப்பதாகவும், தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராக உள்ளதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர். 

இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் கியாரா அத்வானியிடம் படக்குழுவினர் பேசிவருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கியாரா அத்வானி தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிக்கும் தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். ஏற்கனவே ‘தோனி' படத்தில் நடித்து பிரபலமான கியாரா அத்வானி லஸ்ட் ஸ்டோரி, கில்ட்டி போன்ற வெப் தொடர்களில் சர்ச்சையான கதாபாத்திரங்களில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். நடிகர் ராகவா லாரன்ஸ் இந்தியில் அக்‌ஷய் குமாரை வைத்து இயக்கிய ‘லட்சுமி' படத்திலும் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

Next Story