வருங்கால பைக் சாம்பியன் “குட்டி தல”


வருங்கால பைக் சாம்பியன் “குட்டி தல”
x
தினத்தந்தி 31 Oct 2021 8:15 AM GMT (Updated: 2021-10-31T13:45:46+05:30)

இருசக்கர வாகனத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித்குமார் வீடு திரும்பினார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். தற்போது போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக தல அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படதின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வலிமை திரைப்படத்தில் ஏற்கனவே டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பைக்கில் சுற்றும் பயணத்தை அஜித் தொடங்கினார். இதையடுத்து வடஇந்தியவில் பயணத்தை தொடங்கிய அஜித், வாகா எல்லையில் ராணுவ வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

தொடர்ந்து  உலக பயணத்தின் மற்றுமொரு புகைப்படம் வெளியானது.  உயரமான மலையின் பாறை முகட்டில் நின்று அஜித் எடுத்திருக்கும் புகைப்படம் 

இதற்கிடையே நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக பைக் ரைடிங் செய்யும் புகைப்படங்கள், வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 

அந்த வகையில் அஜித்குமாருடன் அவரது மகனான ஆத்விக் தலையில் ஹெல்மெட் மாட்டியபடி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது. இதனை வருங்கால பைக் சாம்பியன் குட்டி தல .என பதிவிட்டு அஜித் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Next Story