துப்பறிவாளன் 2 பிரச்சினை விஷால், மிஷ்கின் மீண்டும் மோதல்


துப்பறிவாளன் 2 பிரச்சினை விஷால், மிஷ்கின் மீண்டும் மோதல்
x
தினத்தந்தி 31 Oct 2021 7:51 PM GMT (Updated: 2021-11-01T01:21:16+05:30)

துப்பறிவாளன் 2 பிரச்சினையில் விஷால், மிஷ்கின் மீண்டும் மோத தொடங்கி உள்ளனர்.

விஷாலுடன் ஏற்பட்ட மோதலால் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கிய மிஷ்கின் கடந்த வருடம் அந்த படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து துப்பறிவாளன் 2 படத்தை நானே இயக்கி நடிப்பேன் என்று விஷால் அறிவித்தார். 

அப்போது இருவரும் ஒருவர்மீது ஒருவர் குற்றச்சாட்டு சுமத்தினர். அதன்பிறகு அமைதியான இருவரும் இப்போது மீண்டும் மோத தொடங்கி உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு விஷால் அளித்த பேட்டியில், ‘‘மிஷ்கின் துப்பறிவாளன் 2 படத்தில் எனக்கு துரோகம் செய்து விட்டார். அந்த படத்துக்கு ரூ.10 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளேன். 

துப்பறிவாளன் 2 படத்துக்கு வேறு இயக்குனரை வைத்துக்கொள்ளும்படி அவர் குறுந்தகவல் அனுப்பியபோது லண்டன் தெருக்களில் உடைந்துபோய் உட்கார்ந்து இருந்தேன். அவரது தம்பியையும் அனுப்ப மறுத்து விட்டார். இதனால் திரைக்கதையை மாற்றி எழுதி உள்ளேன்” என்றார். இதற்கு பதிலடியாக மிஷ்கின் அளித்துள்ள பேட்டியில், ‘‘விஷால் என்னைத் தவறாகச் சித்தரித்து வருகிறார். எனக்கு தந்த சம்பளத்துக்கு 35 லட்ச ரூபாய் வரை ஜி.எஸ்.டி கட்டவில்லை. ஜி.எஸ்.டி கட்டிவிட்டு எனது தம்பியை அழைத்துச் செல்லட்டும். ‘துப்பறிவாளன் 2' படத்தில் இணை இயக்குநராக பணிபுரிந்தவரை தரக்குறைவாக நடத்தியதால் படத்திலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று ஊருக்குச் செல்லத் தயாரானார். விஷால் என் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து தவறாக பேசி வருகிறார். அதை நிறுத்திகொள்ள வேண்டும்” என்றார்.

Next Story