ஒன்றரை வருடமாக முடக்கம்: மீண்டும் தொடங்கும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு


ஒன்றரை வருடமாக முடக்கம்: மீண்டும் தொடங்கும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு
x
தினத்தந்தி 3 Nov 2021 7:10 AM GMT (Updated: 3 Nov 2021 7:10 AM GMT)

ஒன்றரை வருடங்களுக்கு பிறகு அடுத்த மாதம் (டிசம்பர்) இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்துக்கு தொடர்ந்து தடங்கல்கள் ஏற்பட்டன. படத்தை ஆரம்பித்தபோதே கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லாமல் படப்பிடிப்பு சில மாதங்கள் முடங்கியது. மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியபோது கடந்த வருடம் பிப்ரவரி மாதம் கிரேன் சரிந்து படக்குழுவை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. 

அதன் பிறகு கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடிக்கவும், ஷங்கர் தெலுங்கு படத்தை இயக்கவும் சென்று விட்டதால் இந்தியன் 2 படம் என்ன ஆகும் என்ற குழப்பம் நிலவியது. பிரச்சினை கோர்ட்டுக்கும் சென்றது. இந்தியன் 2 படத்தை தயாரிப்பு தரப்பில் கைவிட்டு விட்டதாகவும் அவ்வப்போது வதந்திகள் பரவின. இதனை படக்குழுவினர் மறுத்து வந்தனர். 

அதன்பிறகு பட நிறுவனத்துக்கும் ஷங்கருக்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து உடன்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு அடுத்த மாதம் (டிசம்பர்) இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கமல்ஹாசன் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியன் 2 படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

Next Story