புனித் மறைவு: “இன்னும் ஒத்துக்க முடியல, இன்னும் ஏத்துக்க முடியல”- நடிகர் சூர்யா கண்ணீர் மல்க பேட்டி


புனித் மறைவு: “இன்னும் ஒத்துக்க முடியல, இன்னும் ஏத்துக்க முடியல”-  நடிகர் சூர்யா கண்ணீர் மல்க பேட்டி
x
தினத்தந்தி 5 Nov 2021 9:58 AM GMT (Updated: 2021-11-05T19:43:19+05:30)

புனித்குமார் ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார் என நடிகர் சூர்யா கூறினார்.

பெங்களூரு,

நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபிறகு நடிகர் சூர்யா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

புனித் மரணம் என்பது நடந்திருக்கக்கூடாத ஒன்று. அவரது மரணத்தை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. என் குடும்பமும் அவரது குடும்பமும் ஆரம்பகாலத்திலிந்து நெருக்கமானது.  

நான் என் தாயின் வயிற்றில் 4 மாத கருவாக இருந்தபோது அவரும் அவரது தாயார் வயிற்றில் 7 மாத கருவாக இருந்ததாக எனது தாய் கூறியிருக்கிறார். எப்போது சிரித்த முகத்துடனே இருக்கும் அவர், ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். 

அவர் மரணமடையவில்லை நம்முடனே வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு மனவலிமையை கொடுக்க வேண்டுகிறேன் என கூறினார்.

Next Story