‘என்னை ஏமாற்றிய டைரக்டர்கள்’ - டைரக்டர் சக்தி சிதம்பரம்


‘என்னை ஏமாற்றிய டைரக்டர்கள்’ - டைரக்டர் சக்தி சிதம்பரம்
x
தினத்தந்தி 7 Nov 2021 6:52 AM GMT (Updated: 7 Nov 2021 6:52 AM GMT)

தமிழ் திரையுலகின் பெரும்பாலான நடிகர்களும், டைரக்டர்களும் கிராமங்களில் இருந்து சென்னை வந்தவர்கள்தான். இந்த பட்டியலில் டைரக்டர் சக்தி சிதம்பரமும் ஒருவர். இவருடைய சொந்த ஊர், சாத்தூர். டைரக்டராக மாறியது எப்படி? என்பதை அவரே கூறுகிறார்:-

‘‘சின்ன வயதில் எனக்கு சினிமா மீது அவ்வளாக ஆர்வம் இல்லை. பெற்றோர்களுடன் தியேட்டருக்குப் போய் படம் பார்க்க பார்க்க ஆர்வம் கூடியது. எங்க ஊரில் இருந்து சென்னைக்கு வந்தேன். ஆரம்பத்தில் என்னை கதாநாயகனாக காண்பிக்கிறேன் என்று சிலர் சொன்னதை நம்பி, பணம் கொடுத்து ஏமாந்து இருக்கிறேன். கேமராவுக்குள் பிலிமே இல்லாமல், என்னை நடிக்க வைத்து ஏமாற்றி இருக்கிறார்கள்.

என் தோற்றத்துக்கு நடிப்பு சரிப்பட்டு வராது என்பதை புரிந்துகொண்டு டைரக்டராக மாறினேன். சத்யராஜ், பிரபு, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்பட பல கதாநாயகர்களை வைத்து வெற்றி படங்கள் கொடுத்து இருக்கிறேன். என் படங்களில் நகைச்சுவைக்கு முக்கியம் கொடுத்து இருப்பேன். நான் இயக்கிய ‘சார்லி சாப்ளின்’ படம் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 4 மொழிகளில் ‘ரீமேக்’ செய்யப்பட்டு வெற்றி பெற்றன. சமீபத்தில் நான் இயக்கி வெளிவந்த ‘பேய் மாமா’ படமும் வெற்றிகரமாக ஓடியது.’’

Next Story