நிவேதா தாமசுக்கு பிடித்த நடிகர்கள்


நிவேதா தாமசுக்கு பிடித்த நடிகர்கள்
x
தினத்தந்தி 12 Nov 2021 5:13 AM GMT (Updated: 2021-11-12T10:43:02+05:30)

தமிழ், தெலுங்கு பட உலகில் வளரும் இளம் நடிகையான நிவேதா தாமஸ் தனக்கு பிடித்த நடிகர்கள் பற்றி பேசி உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில்

‘‘தெலுங்கு சினிமா துறையில் நடிகர் நானியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார். நானிக்கு பிறகு ஜூனியர் என்.டி.ஆர் என்றால் மிகவும் பிடிக்கும்.

அவருடைய டான்சுக்கு நான் தீவிர ரசிகை. எனர்ஜிக்கு இன்னொரு பெயர் சொல்ல வேண்டுமென்றால் ஜூனியர் என்.டி.ஆர் தான். செட்டில் அவரும் உற்சாகமாக இருந்து மற்றவர்களையும் உற்சாகப்படுத்துவார். அவருக்கு ஜுரம் இருந்தாலும், படப்பிடிப்புகளினால் தூக்கமில்லாமல் இருந்தாலும், வேறு ஏதாவது பிரச்சினை இருந்தாலும் அதையெல்லாம் வெளியே காட்டிக் கொள்ளவே மாட்டார். இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் கஷ்டம் ஏற்படாமல் தான் ஒதுக்கிய தேதிகளில் படப்பிடிப்புக்கு ஆஜராகி விடுவார். தொழில் ரீதியாக அவரிடமிருந்து நான் எத்தனையோ விஷயங்களை கற்றுக்கொண்டேன்'' என்றார்.

Next Story