டி.ஜி.தியாகராஜன்- ஹிப் ஹாப் ஆதி கூட்டணி மறுபடியும் இணைந்தது


டி.ஜி.தியாகராஜன்- ஹிப் ஹாப் ஆதி கூட்டணி மறுபடியும் இணைந்தது
x
தினத்தந்தி 12 Nov 2021 10:56 AM GMT (Updated: 2021-11-12T16:26:21+05:30)

சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன், ஹிப் ஹாப் ஆதி கூட்டணியில் தயாராகி வந்த ‘அன்பறிவு’ படம், திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது.

படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ‘மரகத நாணயம்’ பட புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில், ஜனரஞ்சகமான படமாக தயாராகிறது. டி.ஜி.தியாகராஜனின் மகன்கள் செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கி சென்னை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.

75 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Next Story