சினிமா செய்திகள்

டைரக்டர் செல்வராகவன் நடிக்கும் 'சாணிக் காயிதம்' ஓடிடியில் வெளியாகிறது..? + "||" + 'saani kaayidham' starring director Selvaragavan is released on OTT..?

டைரக்டர் செல்வராகவன் நடிக்கும் 'சாணிக் காயிதம்' ஓடிடியில் வெளியாகிறது..?

டைரக்டர் செல்வராகவன் நடிக்கும் 'சாணிக் காயிதம்' ஓடிடியில் வெளியாகிறது..?
டைரக்டர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் சாணிக் காயிதம் திரைப்படம் பிப்ரவரி மாதம் அமேசான் பிரைமில் வெளியாகிறது.
சென்னை,

தமிழ்த் திரையுலகின் முண்ணனி டைரக்டர்களில் ஒருவரான செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் 'சாணிக் காயிதம்'. இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவனுடன் இணைந்து நடிக்கிறார். படத்திற்காக செல்வராகவன் தன்னுடைய உடலை குறைத்துள்ளார்.

ஸ்கிரீன் சீன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அருண் மாதேஷ்வரன் இயக்கியிருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாணிக் காயிதம் திரைப்படம் ராமேஸ்வரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. 80 களின் காலக்கட்டத்தின் பிண்ணனியில் நடக்கும் கிரைம் திரில்லராக இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார், மேலும், சில்லுக்கருப்பட்டி புகழ் யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் வில்லனாகும் இயக்குனர் செல்வராகவன்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்த நிலையில் மீண்டும் வில்லனாக ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
2. மாநாடு படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்ட செல்வராகவன்
பிரபல இயக்குனரும் நடிகருமான செல்வராகவன், சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
3. பிரபல இயக்குனர் படத்தில் கதை நாயகனாக நடிக்கும் செல்வராகவன்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் அடுத்ததாக பிரபல இயக்குனர் படத்தில் கதையின் நாயகனாக நடிக்க இருக்கிறார்.
4. அது ஒரு இம்சை... தனிமையே பேரின்பம் - செல்வராகவன்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனிமை பற்றி ஒரு பதிவு செய்திருக்கிறார்.
5. தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன்-2 படம் கைவிடப்பட்டதா?
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்து 2010-ல் திரைக்கு வந்த ஆயிரத்தில் ஒருவன் படம் வித்தியாசமான கதை மற்றும் காட்சி அமைப்புகளுடன் இருந்ததாக பாராட்டுகள் கிடைத்தன.